
கோலாலமபூர், ஜன 27 – Bandarya LRT நிலையத்திற்கு அருகேயுள்ள பிரதான சுவரில் பிளவு ஏற்பட்டதைத் தொடரந்து Ampang – Sri Petaling சேவைக்கான LRT சேவையில் இன்று காலையில் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை மணி 6.39 அளவில் தனது முகநூலில் பதிவிட்ட அறிக்கையில் எல்.ஆர்.டி சேவையை நடத்திவரும் Rapid KL இதனை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு மாற்று LRT ரயில் சேவையை Rapid KL ஏற்பாடு செய்தது. அதோடு பயனீட்டாளர்கள் மாற்று பயண சேவையை பயன்படுத்தும்படி அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டது.