Latestஉலகம்

செவ்வாய் கிரக ‘ரோவரை’ இயக்கிய முதல் இந்திய பெண், அக்க்ஷதா; புதிய சாதனைப் படைத்தார்

அமெரிக்கா, டிசம்பர் 9 – செவ்வாய் கிரகத்தில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின், “பெர்செவரன்ஸ்” (Perseverance) ரோவரை இயக்கி, இந்தியாவைச் சேர்ந்த அக்க்ஷதா (Akshata) கிருஷ்ணமூர்த்தி வரலாறு படைத்துள்ளார்.

பெர்செவரன்ஸ் ரோவர் என்பது, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா? என்பதை ஆராய்வது உட்பட பூமிக்கு கொண்டு வர மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரிக்கும் சிறு வாகனம் ஆகும்.

தனது அந்த சாதனையை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அக்க்ஷதா, “எந்த கனவும் பெரிதானதோ, பைத்தியகாரத்தனமானதோ அல்ல. உங்களை நம்புங்கள். தொடர்ந்து உழையுங்கள். நீங்கள் விரும்பியதை கட்டாயம் அடைவீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நாசாவில் பணிப்புரியும் அக்க்ஷதா, முதன்மை ஆய்வாளராகவும், அறிவியல் திட்ட மேலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

குறிப்பாக, பூமிக்கு கொண்டு வர மாதிரிகளை சேகரிக்கும் “பெர்செவரன்ஸ்” ரோவர் உட்பட பல்வேறு விண்வெளி திட்டங்களில் அவர் பணியாற்றி வருகிறார்.

அவரது சாதனை தொடர்பான வீடியோவை இதுவரை ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை ; பலர் அவரது உழைப்பையும், தன்னம்பிக்கையையும் பாராட்டி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!