வாஷிங்டன் , ஆக 15 – அமெரிக்காவின் பிரபல Amos பிஸ்கட் தயாரிப்பாளரான Wally Amos தனது 88 வயதில் காலமானார். Amos பிஸ்கட் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அவர் இறுதியில் அந்த நிறுவனத்தின் உரிமை மற்றும் Amos என்ற பெயரை பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டார். 1977 ஆம் ஆண்டு ஹவாய்க்கு மாறிய பின் Chip & Cookie என்ற பிஸ்கட் கடையை அவர் திறந்தார். அவர் Honolulu-விலுள்ள தனது வீட்டில் இறந்தபோது அவரது மனைவி கரோலும் உடன் இருந்தார். Demesia எனப்படும் மறதி நோயினால் அவர் இறந்ததாக கூறப்பட்து. அமெரிக்காவில் பிஸ்கட் தயாரிப்பில் மிகப் பெரிய சாதனை ஏற்படுத்திய Amos கறுப்பர் சமூகத்திற்கு மிகப்பெரிய கௌரவத்தையும் நற்பெயரையும் ஏற்படுத்தி தந்துள்ளார் என அவரது நான்கு பிள்ளைகளும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தற்போது விற்கப்படும Amous பிஸ்கட்டின் சுவை தாம் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் போல் இல்லையென அண்மையில் அவர் கூறியிருந்தார். ஹவாயிலுள்ள அவரது பிஸ்கட் கடை மூடப்பட்டுவிட்டது. முதல் முறையாக Hollywood-ட்டில் விற்கப்பட்ட சிறிய அளவிலான பிஸ்கட்டையே அவர் விற்பனை செய்தார். தனது கடையில் புத்தகங்களை வாசிக்கும் பகுதியையும் அவர் ஏற்பாடு செய்ததோடு இதற்காக அவர் தனது சொந்தப் பணத்தில் புத்தகங்களையும் வாங்கி வைத்திருந்தார். எட்டு புத்தகங்களை எழுதியுள்ள அவர் 24 ஆண்டு காலம் வாசிப்பை ஊக்குவித்து வந்ததோடு பல நிகழ்ச்சிகளில் தன்முனைப்பு உரையாற்றியுள்ளார். 1991ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரன George H.W Bush வாசிப்பு துறையில் Amos ஆற்றிய பெரும் பங்கிற்காக Literasi விருது வழங்கி கௌரவித்தார்.