Latestசினிமா

பிரபல இந்திய ராப் பாடகர் கும்பலுக்கு இடையிலான வன்முறையில் கொல்லப்பட்டார்

புது டில்லி, மே 31- உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிகப் பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்டிருக்கும் இந்தியா, பஞ்சாப்பை சேர்ந்த பிரபல ‘ராப்’ பாடகர், கும்பலுக்கு இடையிலான வன்முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்.

28 வயதான Shubhdeep Singh Sidhu அல்லது Sidhu Moose Wala எனும் அந்த பாடகரை YouTube -பில் 1 கோடி 10 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அப்பாடகர் சொந்த ஊரில் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு அல்லது 3 கார்களில் வந்த கும்பல் , சராமாரியாக சுட்டிருக்கின்றனர். அந்த காருக்குள் 30 தோட்டக்கள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இவ்வேளையில், அந்த ராப் பாடகரின் கொலைக்கு கனடாவைத் தளமாகக் கொண்ட குண்டர் கும்பலைச் சேர்ந்தவன் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதாக , போலீசார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!