Latestஇந்தியாசினிமா

பிரபல காமெடி நடிகர் R.S சிவாஜி காலமானர் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி

சென்னை , செப் 3 நடிகர் கமல்ஹசான் உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவரான நகைச்சுவை நடிகர் ஆர்.ஆஸ் சிவாஜி காலமானார். நடிகர் சந்தானபாரதியின் சகோதரரான 66 வயதான சிவாஜி சில நாட்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்.

சவுன்ட் இஞ்சினியரகவும் இருந்துள்ள அவர் 1980 களில் அவர் பிரபல நடிகராக விளகினார். கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் ஜனகராஜ் உடன் அவர் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்தார்.

அந்த படத்தின் தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க என்ற வசனம் தற்போதுவரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றது. பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலும் ஆர். எஸ் சிவாஜி குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

Gargi திரைப்டத்த்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு ரசிகர்களின் நல்ல பாராட்டை பெற்றது. அவரது மறைவை முன்னிட்டு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!