Latestசினிமா

பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார்

சென்னை , நவ 18 – என்னை அறிந்தால் மிருதன், டெடி என 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிகராக வலம் வந்த, இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானச் செய்தி திரையுலகையும் அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நகுல், சுனைனா நடித்த மாசிலாமணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மனோகர், வேலூர் மாவட்டம் என்ற படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!