Latestஇந்தியாஉலகம்

பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்

சென்னை, மே 2 – பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார். 69 வயதுதான உமா ரமணன் சென்னை அடையாரில் வசித்து வந்ததோடு கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவினால்அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இசைஞானி இளையராஜா இசையில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் உமா ரமணன் நேற்று சென்னையில் காலமானது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இசையமைப்பாளர் வித்யாசகர், மணி சர்மா மற்றும் தேனிசை தென்றல் தேவாவின் இசையிலும் அவர் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் பாடலை தீபன் சக்கரவர்த்தியுடன் இணைந்து உமா ரமணன் பாடியிருந்தார்.

மேலும் கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு ,வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், கைதியின் டைரி தென்றலே என்னை தொடு, திருப்பாச்சி உட்பட பல்வேறு திரைப்படங்களில் அவர் பாடல்களை பாடியுள்ளார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறும். அவருக்கு கணவரும் பாடகருமான ஏ,வி ரமணன் மற்றும் மகன் விக்னேஸ் ரமணன் உள்ளனர். கடந்த 35 ஆண்டுகாலமாக அவர் 6,000 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் கச்சேரி நடத்தியுள்ளார். ஆகக்கடைசியாக உமா ரமணன் நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு என்ற பாடலை ஹரிஸ் ராகவேந்திரா மற்றும் பிரேம்ஜி ஆகியோருடன் இணைந்து பாடியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!