சென்னை , பிப் 24 – பிரபல மலையாள நடிகை கேபிஏசி லலிதா காலமானார். 74 வயதுடைய அவர் அதிகமான மலையாளப் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக பல்வேறு விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
நடிகை லலிதாக உடல் நலக் குறைவினால் காலமானார். விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடிகை லலிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளம் மற்றும் தமிழ் என 550க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.