கோலாலம்பூர், மார்ச் 5 – பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட வீமன் உள்ளூர் தமிழ்ப்படம் மார்ச் 24ஆம் தேதி மலேசியா முழுவதிலும் திரையீடு காண்கிறது. ஒரு தந்தையின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படமாக வீமன் விளங்கிறது. கிஷோக்கின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் முன்னணி பாத்திரத்திலும் கிஷோக் நடித்துள்ளார். மேலும் ஜஸ்மின் மைக்கல், கொக்கோ நந்தா, சுரேஸ் திருஞான சம்பந்தன், காலஞ்சென்ற தங்கமணி, குணசேகரன், ஜீ.குட்டி, ஏகவள்ளி, சக்குபாய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளளர்.
மண்ணின் மைந்தர்களின் கைவண்ணத்தில் உருவான வீமன் திரைப்படம் குறித்து அதன் புரோடியூசர் V.P கருடா சிவா வழங்கிய பேட்டியை இப்போது பார்க்கலாம்.
தொடர்ந்து வீமன் திரைப்படத்தின் இயக்குனரும் மற்றும் கதாநாயகனுமான கிஷோக் செய்தியாளர் கூட்டத்தில் இப்படம் குறித்து பல சுவையான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.