சூரிக், பிப் 14 – மருத்துவ ஆராய்ச்சிப் பணிகளுக்கு பிராணிகளை உட்படுத்தி சோதனை மேற்கொள்ளும் நடைமுறைக்கு தடை விதிக்கும் பரிந்துரையை, சுவீஸ் நாட்டு மக்கள் வாக்கெடுப்பின் மூலமாக நிராகரித்துள்ளனர்.
பிராணிகளை மருத்துவ ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது நெறியற்ற செயல் எனக் கூறி அத்தகையை செயலுக்கு தடையை விதிக்கும்படி விலங்கு உரிமை ஆர்வலர்கள் பரிந்துரையை முன் வைத்தனர்.
எனினும் , மக்களின் நலனுக்காக மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு வித்திடக் கூடும் அந்த நடைமுறையை 79 விழுக்காடு சுவீஸ் மக்கள் ஆதரித்திருக்கின்றனர்.