Latestஉலகம்

பிரானா மீன்கள் தாக்கி கால் விரலை இழந்த பெண்

அர்ஜென்டினா, நவ 26 – தென் அமெரிக்கா, Santa Fe ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தவர்களை கொடிய வகை பிரானா மீன் கூட்டம் தாக்கியதில் 13 வயது பெண் ஒருவர் தனது காலின் பெருவிரலை இழந்திருக்கின்றார். மேலும், 30 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாமிச உண்ணிகலான பிரானா மீன்கள் கடித்ததில் பலருக்கு கை -கால் பகுதிகளில் கடுமையான காயங்களும் ஏற்பட்டன. இதனையடுத்து, Santa Fe ஆற்றில் குளிக்க தற்காலிக தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீரின் உஷ்ணம் அதிகரித்து நீர் மட்ட அளவு குறையும்போது இதுபோன்றா பிரானா தாக்குதல் நிகழ்வதாக, இப்பகுதியிலுள்ள கடற்கரை உயிர்காப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!