Latestஉலகம்

பிரான்ஸ்சிலிருந்து இங்கிலாந்து கால்வாயை கடந்தபோது 27 குடியேறிகள் மரணம்

லண்டன், நவ 25 – பிரான்ஸ்சிலிருது இங்கிலாந்து கால்வாயை கடக்க முயன்றபோது 27 குடியேறிகள் மாண்டனர். இந்த சம்பவத்தினால் தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார். கடலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தாம் கவலைப்படுவதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு பிராஸ் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். அதோடு பிரான்ஸ்சிலிருந்து குடியேறிகளை சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு படகு மூலம் கொண்டுவரும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கிடையே ஒத்துழைப்பு தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!