Latestஉலகம்விளையாட்டு

பிரான்ஸ் கேப்டன் Mbappe-வின் மூக்கு உடைந்தது ; யூரோ 2024 ஆட்டத்தின் போது நிகழ்ந்த விபரீதம்

டசல்டார்ப், ஜூன் 18 – ஆஸ்திரியா அணிக்கு எதிரான யூரோ 2024 ஆட்டத்தில் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி வாகை சூடிய  பிரான்ஸ் அணியின் கேப்டன் கைலியன் எம்பாப்பேவின் (Kylian Mbappe) மூக்கு உடைந்தது.

பந்தை அடிக்க போட்டி போட்டுக் கொண்டிருந்த போது, எம்பாப்பேவின் தலை ஆஸ்திரிய அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் கெவின் டான்சோவின் (Kevin Danso) தோளில் கடுமையாக மோதியது.

அதனால், மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியதை தொடர்ந்து, ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் எம்பாப்பே திடலை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

அவர்கள் மோதிக் கொண்ட பின்னர் ஆட்டம் வழக்கம் போல தொடர்ந்த போதும், எம்பாப்பே சரியில்லை என ஆஸ்திரிய கோல் காவலர் நடுவருக்கு சமிக்ஞை செய்ததை அடுத்தே, அவர் கவனத்தை பெற்றார். 

அவர் கடுமையான காயங்களுக்கு இலக்காகியுள்ளார். அதனால், அவர் ஆட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார்என பிரான்ஸ் அணியின் பயிற்றுனர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் (Didier Deschamps) உறுதிப்படுத்தினார்.

இரத்தம் படித்த சட்டையுடன் காணப்பட்ட எம்பாப்பேவிற்கு, பிரான்ஸ் அணியின் மருத்துவ குழுவினர்

முதலுதவி வழங்கினர். எனினும், அவர் எவ்வளவு கடுமையான காயத்திற்கு இலக்காகியுள்ளார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!