கோலாலம்பூர், அக்டோபர் 11 – நேற்று, DBKL-லின் அதிரடி சோதனையின் போது, ஜாலான் தம்பிப்பிள்ளை பிரிக்ஃபீல்ட்சில் வழியாகச் செயல்பட்டு வந்த வெளிநாட்டு வியாபாரிகள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவைத் தொடர்ந்து, DBKL அதன் அமலாக்கத் துறை மற்றும் புக்கிட் பிந்தாங் கிளை அலுவலகத்துடன் இணைந்து, இந்தச் சோதனையை மேற்கொண்டதாகக் கூறியிருக்கிறது.
இச்சோதனையில் வெளிநாட்டினர் பயன்படுத்திய அனைத்து வணிக பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த விற்பனையாளர்கள் தப்பித்து விட்டனர்.
எனினும், வீதிகள், வடிகால் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974-யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று DBKL தெரிவித்துள்ளது.