
கோலாலம்பூர், நவம்பர் 16 – போஸ்ட் மலேசியா பெர்ஹாட் (குரூப் அல்லது போஸ்ட் மலேசியா) தனது இரண்டாவது போஸ்ட் ஷாப் பல்நோக்கு கன்வீனியன்ஸ் கடையை கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் திறந்துள்ளது.
அந்த புதிய பல்நோக்கு போஸ்ட் ஷாப் அங்கு ஏற்கனவே செயல்பட்டு வரும் பிரிக்பீல்ட்ஸ் எக்ஸ்பிரஸ் போஸ்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
அதன் வாயிலாக, பிரிக்பீல்ட்ஸ்சில், போஸ்ட் மலேசியா 1100 சதுர அடிக்கு மேல் சில்லறை விற்பனை இடத்தை கொண்டுள்ளது.
அதே சமயம், பிரிக்பீல்ட்ஸ் போஸ்ட் ஷாப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், போஸ்ட் கெபே உணவகமும் அறிமுகம் கண்டுள்ளது.
அது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரெடி டு இட் பானியில் பலவிதமான உணவு மற்றும் பானங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. வாடிக்கையாளர்கள் அந்த உணவு வகைகளை அங்கு அமர்ந்து உண்ணலாம் அல்லது வாங்கிச் செல்லலாம்.
இவ்வாண்டில் நாட்டில் திறப்பு விழா கண்ட இரண்டாவது போஸ்ட் ஷாப் இதுவாகும். 2023 மே மாதம், தலைநகர், மேடான் துவான்குவில் முதல் போஸ்ட் ஷாப் திறப்பு விழா கண்டது.
மேடான் துவான்கு போஸ்ட் ஷாப்பிற்கு மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த இரண்டாவது போஸ்ட் ஷாப்பும் மக்களின் வற்றாத ஆதரவை பெறுமென, போஸ் மலேசியாவின் உருமாற்று, இலக்கவியல் குழுமத் தலைவர் சுமேஸ் ராஹாவேன்றா தெரிவித்தார்.
போஸ் மலேசியாவின் தற்போதைய உருமாற்றப் பயணத்தில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் புதுமையான சில்லறை வணிகச் சேவை வழங்க அந்நிறுவனம் உறுதிப்பூண்டுள்ளது.
மக்களுக்கு அதிக சேவைகள் மற்றும் வசதிகளை வழங்க ஏதுவாக போஸ்ட் மலேசியாவின் விற்பனை தளம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காக வாழ்க்கையையும், வணிகத்தையும் இணைத்து நம்பிக்கையை வளர்ப்பதில் ஆர்வமுள்ள ஒரு அமைப்பாக, பாரம்பரிய அஞ்சல் பரிவர்த்தனைகளின் வரம்புகளுக்கு அப்பால் உள்ளூர் மக்களுக்கு சேவையை வழங்க போஸ்ட் மலேசியா உறுதியாக உள்ளது.
அதோடு, இம்மாதம் இறுதி வரையில், பிரிக்பீல்ட்ஸ் போஸ்ட் ஷாப்பில் ஐஸ்கிரீம் மற்றும் பாவுக்கான, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் எனும் சலுகையும் வழங்கப்படும்.
அதனால் மக்களுக்கு தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க, இவ்வாண்டு இறுதிக்குள் பஹாங், சிலாங்கூர், ஜொகூர் மற்றும் மலாக்கா ஆகிய இடங்களில் மேலும் ஒன்பது போஸ்ட் ஷாப்பக்களை திறக்க போஸ்ட் மலேசியா திட்டம் வகுத்துள்ளது.