
பிரிக்பீல்ட்ஸ், செப் 4 – இன்று பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதிக்கு வருகை புரிந்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பிரபல இந்திய உணவகமான கார சாரத்தில் உணவருந்தினார்.
அவரை கார சார உணவகத்தின் நிர்வாக இயக்குனர் ஶ்ரீதர்ன் வரவேற்றார். தமது அழைப்பில் அந்த உணவகத்திற்கு வருகையளித்த நல்லெண்ணம் மகிழ்ச்சியளிப்பதாக ம.இ.கா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.
இவர்களோடு கோலாலம்பூர் தேவஸ்தான தலைவர் டான் ஶ்ரீ நடராஜாவும் உடனிருந்தார்.