Latestஉலகம்மலேசியா

பிரிக்பீல்ட்ஸ் சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; இன்றிரவு ரத ஊர்வலம்

பிரிக்பீல்ட்ஸ், செப் 19 – இன்று நாடு முழுவதும் வினை தீர்க்கும் விநாயகப் பெருமானின் விநாயரகர் சதுர்த்தி மிக விமரிசையாக அனுசரிக்கப்பட்டது.
வீடுகளில் பூஜைகளை முடித்த பக்த பெருமக்கள், பின்னர் நாடு முழுவதும் உள்ள விநாயகப் பெருமானின் ஸ்தலங்களில் பக்தர்கள் அவரின் தரிசனம் பெற்றனர்.

பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தி மிகவும் விமரிசையாகும். அந்த வகையில், காலையிலேயே அங்கு பூஜைகள் தொடங்கப்பட்டு, பின்னர் ஆலயம் வரும் சுமார் 2000 பக்தர்களுக்கு அன்னதானமும் இவ்வாலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இடர்கள் நீங்கி வாழ்வில் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று இன்பமாக வாழ விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டாடினர் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!