
கோலாலம்பூர், ஜன 27 – பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது. கோலாலம்பூர் மட்டுமின்றி கிள்ளான் பள்ளத்தாக்கு ,சிரம்பான் போன்ற இடங்களிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கர்ன பக்தர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பல லட்சம் ரிங்கிட் செலவில் திருப்பணி செய்யப்பட்டு ஸ்ரீ மகா ஆஞ்சநேயர் ஆலயம் மிகவு கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த ஆலயம் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தின் முக்கிய அடையாளமாகவும் திகழ்வதாக ஆலயத் தலைவர் சுரேஸ் தெரிவித்தார். பல முறை தடைப்பட்ட மகா கும்பாபிஷேக ஆகம முறைப்படி மிகவும் சிறப்பாக நடைபெற்றது குறித்து அவர் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.