
லண்டன், மார்ச் 17- சம்பள உயர்வுக்கு கோரிக்கை விடுத்து அடுத்த மாதம் தொடங்கி பிரிட்டன் கடப்பிதழ் அதிகாரிகள் ஐந்து வாரங்களுக்கு மறியலில் ஈடுபடவிருக்கின்றனர். லண்டன், லிவர்பூல் மற்றும் கிளாஸ்கோ உட்பட பிரிட்டன் முழுவதிலும் உள்ள கடப்பிதழ் அதிகாரிகளை பிரதிநிதிக்கும் பொது மற்றும் வர்த்தக சேகைகள் தொழிற்சங்கத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அந்த மறியலில் ஈடுபடவிருக்கின்றனர். ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்கி மே 5 ஆம் தேதி வரை அந்த மறியல் நடைபெறும் என தொழிற்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அண்மைய மாதங்களாக பிரிட்டனின் இதர துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் சம்பள உயர்வு கோரி மறியல்களை நடத்தினர்.