
லண்டன், செப் 8 – பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் டிரஸ் ( Liz Truss ) தமது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி பெண்ணான சூலா பிரேவர்மென்னை (Suella Braverman ) உள்துறை அமைச்சராக பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார். சூலா பிரேவர்மென்னின் தாய் உமா தமிழகத்தை சேர்ந்தவர், 1960ஆம் ஆண்டுக் காலத்தில் அவர் பிரிட்டனில் குடியேறினார். இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவைச் சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவரை உமா மணந்து கொண்டார். அந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் சூலா பிரேவர்மென். அதோடு பிரிட்டன் வரலாற்றில் அமைச்சரவையில் முதல் முறையாக முக்கிய துறைகளின் அமைச்சர்களாக வெள்ளையர்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் சட்டத்துறை தலைவராக சூலா பிரேவர்மென் பணியாற்றி வந்தார். லிஸ் டிரசின் அமைச்சரவையில் Therese Coffey (தெரேஸ் காபி) துணைப் பிரதமராகவும், Kwasi Kwarteng நிதி அமைச்சராகவும், James Cleverly வெளியுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்காப்பு அமைச்சராக Ben wallace பென் வாலஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.