
பிரிட்டன் அரச செங்கோலில் இடம்பெற்றிருக்கும், அரிய வைரம், தென்னாப்பிரிக்காவிடமே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது.
வரும் சனிக்கிழமை, மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் அந்த செங்கோல் முக்கிய அங்கம் வகிக்கவுள்ளதை முன்னிட்டு, அந்த கோரிக்கை மீண்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.
530 காராட் எடை கொண்ட அந்த அரிய வைரம், 1905-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த தென் ஆப்பிரிக்காவின் காலனித்துவ அரசாங்கத்தால், அந்த வைரம் பிரிட்டிஷ் மன்னராட்சியிடம் வழங்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவின் பெருமைக்குரிய சின்னமாகவும், பாரம்பரியத்தின் அடையாளமாகவும் திகழும் அந்த வைரம், தென் ஆப்பிரிக்கர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டுமென, அந்நாட்டு தன்னார்வலர்கள் கோரிக்கையை குன் வைத்துள்ள வேளை ; அதற்கென தொடங்கப்பட்ட இணைய மனுவில் இதுவரை எட்டாயிரத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்