பிரிட்டன், பிப் 15 – பிரிட்டன் இளவரசர் Charles – சிற்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு 4 தினங்களுக்குப் பின்னர், தற்போது அவரது துணைவியார் கமில்லாவும் அந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சார்லஸும் கமில்லாவும் பூஸ்டர் தடுப்பூசி உட்பட கோவிட்டிற்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்நிலையில், தமதுக்கு தொற்று ஏற்படுவதற்கு முன்பாக, இரு தினங்களுக்கு முன்பு, தமது தாயாரான இரண்டாம் எலிசெபத் அரசியாரை சார்ல்ஸ் சந்தித்திருக்கும் நிலையில், ராணியாரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.