மாஸ்கோ, மார்ச் 1 – பிரிட்டன், ஜெர்மனி உட்பட 36 நாடுகளைச் சேர்ந்த விமானங்களுக்கு தடை விதிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கனடா உட்பட ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவின் விமானங்கள் தரையிறங்குவதற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல நாடுகளின் விமானங்களுக்கு தடை விதிப்பதாக ரஷ்யாவும் அறிவித்துள்ளது.
சிறப்பு அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே தனது வான் பகுதியில் வெளிநாட்டு விமானங்கள் பயணம் செய்ய முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது