Latestஉலகம்

பிரிட்டிஷ் பிரதமர் தேர்வு 2-ஆவது சுற்றுக்கு ரிஷி சுனாக் தேர்வு

லண்டன், ஜூலை 14 – பிரிட்டனின் அடுத்த பிரதமராக வருவதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் ( Conservative ) கட்சித் தலைவர் பதவிக்கு ரிஷி சுனாக்
(Rishi Sunak ) தேர்வு பெறுவாரா என்ற ஆர்வம் பிரிட்டனுக்கு வெளியே இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள அரசியல் பார்வையாளர்கள் ஆர்வமாக கவனித்து வருகின்றனர். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக ரிஷி சுனாக் தேர்வு பெற்றால் பிரிட்டனிலுள்ள இந்திய வம்சாவளி ஒருவர் முதல் முறையாக அந்நாட்டின் பிரதமராக தேர்வு பெறும் பிரகாசமான வாய்ப்பு ஏற்படலாம். 42 வயதுடைய ரிஷி சுனாக் இந்தியாவின் கோடிஸ்வரர்களில் ஒருவரும் Infosys Ltd நிறுவனத்தின் உரிமையாளரான NR Narayana Murthy-யின் மருமகன் ஆவார். இதனிடையே நேற்று நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான முதல் சுற்று தேர்தலில் 8 பேர் போட்டியிட்டனர். கர்சர்வெட்டிவ் கட்சியின் 358 எம்.பிக்கள் வாக்களித்தனர். பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனாக் 88 வாக்குகள் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது சுற்று வாக்களிப்பு இன்று நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!