Latestமலேசியாவிளையாட்டு
பிரிமியர் சூப்பர் லீக் காற்பந்து போட்டி நெகிரி செம்பிலான் குழுவை JDT வீழ்த்தியது

சிரம்பான், மார்ச் 7 – பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் நேற்று Paroi Tuanku Abdul Rahman விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜோகூரின் JDT அணி 7- 0 என்ற கோல் கணக்கில் நெகிரி செம்பிலான் காற்பந்து குழுவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் பெரும் பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த JDT குழுவினர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து கோல்களை அடித்து நெகிரி செம்பிலான் குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.