
கோலாலம்பூர், மார்ச் 12 – பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் JTD எனப்படும் Johor Darul Ta’zim குழு 5 -2 என்ற கோல் கணக்கில் Kelantan FC அணியை வீழ்த்தியது.
முற்பகுதி ஆட்டத்தில் 3 – 0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்த JTD அணி பிற்பகுதி ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்களை அடித்து எதிர்ப்பார்க்கப்பட்டதைவிட மிகவும் எளிதாக வெற்றி பெற்றது.
இதனிடையே நேற்றிரவு சிரம்பானில் நெகிரி செம்பிலானுக்கும் கோலாலம்பூர் சிட்டி குழுவுக்குமிடையே நடைபெற்ற ஆட்டம் கடமையான மழையினால் 27 நிமிடத்தில் நிறுத்தப்பட்டதோடு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.