ஷா ஆலாம், ஏப்ரல்-10, சிலாங்கூர் ஷா ஆலாமில்
பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி, சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்றிருந்த 14 வாகனங்களை மோதித் தள்ளியது.
அச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணி வாக்கில் கூட்டரசு நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.
குப்பை லாரி ஓட்டுநரான 41 வயது உள்ளூர் ஆடவருக்கு நல்ல வேளையாகக் காயம் ஏற்படவில்லை.
விபத்துக்குப் பிறகு அவர் போலீஸில் அது குறித்து புகாரளித்தார்.
குப்பை லாரியால் மோதப்பட்ட மற்ற வாகனமோட்டிகளுக்கும் காயம் எதுவும் இல்லை என, வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ACP விஜய ராவ் தெரிவித்தார்.
அக்குப்பை லாரி சம்பவத்தின் போது ஷா ஆலாமில் இருந்து காப்பாருக்குப் போய்க் கொண்டிருந்தது.
ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட பொருள் எதனையும் உட்கொள்ளவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
பிரேக் பழுதான லாரி, பரிசோதனைக்காக Puspakom-முக்கு அனுப்பப்படுவதாக விஜய ராவ் சொன்னார்.
அச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது வைரலான காணொலியில் தெரிந்தது.