பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-16, NKVE நெடுஞ்சாலையின் 18.5-வது கிலோ மீட்டரில் கட்டுப்பாட்டையிழந்த டிரேய்லர் லாரி, 8 வாகனங்களை மோதியது.
திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்துக்கு, டிரேய்லர் லாரியின் பிரேக் பிடிக்காமல் போனதே காரணம் என பெட்டாலிங் ஜெயா போலீஸ் கூறியது.
சம்பவத்தின் போது சாலை நெரிசலாக இருந்ததால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன.
அப்போது மேட்டிலிருந்து இறங்கிய லாரியின் பிரேக் செயலிழந்ததால், அது மற்ற வாகனங்களை மோதியது.
மோதப்பட்ட வாகனங்களுக்கு சேதாரம் ஏற்பட்டாலும், அதில் எவரும் காயமடையவில்லை.
இதையடுத்து சம்பந்தப்பட்ட டிரேய்லர் லாரி ஓட்டுநருக்கு எதிராக விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.