பெட்ரோபோலீஸ், பிப் 18 – பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலையில் பெய்த கடுமையான மழையினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நிலத்தில் புதையுண்டவர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்தனர். பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளில் தங்கியுள்ளனர்.
இப்போது ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் போர்க்காலத்தைப் போன்று மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக Rio de Janeiro கவர்னர் Claudio Castro தெரிவித்தார். மருத்துவமனை சவக்கிடங்கில் சடலங்களை வைக்க இடம் பற்றாக்குறை ஏற்பட்டுளளதால் குளிர்சாதன கருவிகளைக் கொண்ட டிரக் லோரிகள் தற்காலிகமாக சடலங்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.