பெட்ரோ போலீஸ், பிப் 17 – பிரேசிலில் பிரபல சுற்றுலா நகரில் பெய்த கடுமையான மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் குறைந்தது 78 பேர் மாண்டனர்.
விடாமல் பெய்த மழையினால் ஆறுகள் கரைபுரண்டு வெள்ளம் ஏற்பட்டதால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் சகதிகள் மிகவும் மோசமாக இருப்பதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
பலர் காணவில்லை என அறிவிக்கப்பட்டதால் மாண்டவர்கள் எண்ணிகை அதிகரித்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.பருவநிலை மாற்றத்தினால் கடந்த மூன்று மாத காலமாக பிரேசிலில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன