
சல் பவ்லோ, பிப் 24 – பிரேசிலில் கடும் மழை மற்றும் புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் 50 பேர் மாண்டனர். 38 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 3,000 த்திற்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சவ் பவ்லோ மாநிலத்தில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக பெய்த மழையினால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் மோசமான வெள்ளப் பேரிடரினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். கரையோரப் பகுதிகளில் வெள்ள நிலைமை மோசம் அடைந்ததால் கடற்படை கப்பல்களின் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அடுத்தசில நாட்களில் பிரேசிலில் மேலும் கடுமையாக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.