Latestஉலகம்

பிரேசிலில் கடும் மழை வெள்ளத்தினால் 17,237 பேர் வெளியேற்றம்; 10 பேர் மரணம்

சவ் பவ்லோ, ஜன 12 – பிரேசிலின் தெக்கிழக்கு பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் 11 வயது சிறுமி உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக பெய்த மழையினால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களும் ஏற்பட்டதாக சிவில் தாற்காப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்தார். ஆறுகள் கரை புரண்டு ஓடுகின்றன. வெள்ளத்தின் காரணமாக சுமார் 17,237 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அளவுக்கு அதிகமான மேம்பாடு மற்றும் நகர்களை விரிவுபடுத்தும் நடவடிக்கை சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக துணை கவர்னர் Paulo Brant கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!