ரியோ டெ ஜெனிஐரோ, பிப் 24 – பிரேசிலில் PetroPolis நகரில் மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204ஆக உயர்ந்தது.
மலைப்பகுதி வட்டாரங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சகதியுயோடு புதையுண்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 51 பேர் இன்னும் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.
அப்பகுதியில் புயல் வீசியதை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக Rio de Janeiro தீயணைப்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை இழந்த மக்களில் பலர் பள்ளிகளில் தங்கியுள்ளனர்.