Latestமலேசியா

பிரேசில் நாட்டில் மோசமடையும் காட்டுத் தீ; கவனமாக இருக்கும்படி அங்குள்ள மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

புத்ராஜெயா, ஆகஸ்ட் -27 – பிரேசில் நாட்டின் சாவோ பாலோவில் (Sao Paulo) மோசமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால், கவனமாக இருக்கும்படி அங்குள்ள மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

உள்ளுர் அதிகாரிகளின் பாதுகாப்பு உத்தரவுகளை அவர்கள் தவறாது பின்பற்ற வேண்டுமென வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) அறிவுறுத்தியது.

தலைநகர் பிரேசிலியாவிலுள்ள (Brasilia) மலேசியத் தூதரகம் அங்கு நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

எனவே அவ்வப்போது முக்கியத் தகவல்கள் பரிமாறப்படுமென்றும் விஸ்மா புத்ரா கூறியது.

வெப்பம் மற்றும் வறட்சியினால் பரவத் தொடங்கியதாக நம்பப்படும் காட்டுத் தீயால், பல நகரங்கள் மோசமான புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

விமானப் பயணங்கள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டு, பள்ளிகளும் மூடப்பட்டன.

Sao Paulo-வில் 45 ஊராட்சி மன்றங்களில் அவசர காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீயை அணைக்க இராணுவ விமானங்கள் உதவியுடன் 15,000 தீயணைப்பு வீரர்களும், தொண்டூழிப் படையினரும் இரவு பகலாகப் போராடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!