சாவ் பாவ்லோ, ஆகஸ்ட் -10 – 61 பேருடன் சென்ற பயணிகள் விமானமொன்று பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ (Sao Paolo) நகரில் விழுந்து நொறுங்கியது.
அதில் அனைத்து 57 பயணிகளும் 4 பணியாளர்களும் உயிரிழந்ததை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக Voepass விமான நிறுவனம் அறிவித்தது.
எனினும், விமானம் வெடித்து விழுந்ததில் தரையிலிருந்த வேறு எவரும் பாதிக்கப்படவில்லை.
அவசர மீட்புக் குழுவில் சம்பவ இடத்தில் குவிந்துள்ளதோடு, விசாரணைகளும் தொடங்கியுள்ளன.
அவ்விமானம் குடியிருப்புப்லகுதியில் செங்குத்தாக தரையில் விழுந்து நொறுங்குவதை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள வீடியோக்கள் காட்டுகின்றன.
2007-ல் விமானமொன்று தீப்பிடித்து 119 பேர் பலியான சம்பவத்திற்குப் பிறகு பிரேசிலில் நிகழ்ந்துள்ள மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.