கோலாலம்பூர். மே 27 – இறந்த இரு நோயாளிகளின் பிரேதங்களை எடுத்துச் செல்லும் குத்தகைகளை பெறுவதற்காக தனிப்பட்ட நபரிடமிருந்து 30,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதன் தொடர்பில் மருத்துவமனையின் இரண்டு ஊழியர்களை எம்.ஏ.சி.சி கைது செய்துள்ளது. 42 மற்றும் 40 வயதுடைய அந்த இரு நபர்களும் வாக்குமூலம் வழங்கிய பின்னர் சிலாங்கூர் எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஒரு மருத்துவமனையின் ஊழியர்கள் என எம்.ஏ.சி.சி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை இறந்தவர்களின் ஒவ்வொரு பிரேதத்திற்கும் அந்த சந்தேக நபர்கள் 300 ரிங்கிட் தொகையை அந்த தனிப்பட்ட நபரிடம் பெற்றுள்ளளனர்.
Related Articles
Check Also
Close