கோலாலம்பூர், ஜனவரி-1, பல்வேறு சுக துக்க நினைவுகளுடன் 2024-க்கு விடைகொடுத்து உலகமே 2025, ஆங்கிலப் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்றுள்ளது.
உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.
அங்கு வாணவேடிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
நம் நாட்டிலும் நள்ளிரவில் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள் களைக்கட்டின.
குறிப்பாக KLCC, TRX, KL Tower போன்ற வானுயரக் கட்டடங்களில் வாணவேடிக்கைள் கண்ணைப் பறித்தன.
இந்நிலையில் இன்று காலை நாடு முழுவதும் கோயில்களிலும் தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
பொது விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்ப சகிதமாக சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றுள்ளனர்.
பிறந்துள்ள இந்த 2025 ஆம் ஆண்டு எல்லாருக்கும் வளமான ஆண்டாக அமைய வணக்கம் மலேசியாவும் வாழ்த்துகிறது.