Latestமலேசியா

பிறையில் இந்திய குடியிருப்பு பகுதியை பாதுகாப்பீர்; பினாங்கு அரசுக்கு ராமசாமி கோரிக்கை

பினாங்கு, ஜூன் 4 – பிறையில் கம்போங் மெயின் ரோட் இந்திய குடியிருப்பு பகுதியை பாதுகாக்கும்படி பினாங்கு மாநில அரசாங்கத்திற்கு முன்னாள் துணை முதலமைச்சரான பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார். புதிய வீடமைப்பு திட்டங்களுக்காக அந்த குடியிருப்பு பகுதியை பினாங்கு அரசாங்கம் அகற்றிவிடக்கூடாது என உரிமைக் கட்சியின் தலைவருமான அவர் வலியுறுத்தினார். பிறையைச் சுற்றிலும் மற்றும் அங்குள்ள 700 குடிசைவாசிகளின் குடும்பத்தினருக்காக உயரமான அடுக்கு மாடி வீடுகளை கட்டும் திட்டத்தை பினாங்கு மாநில அரசாங்கம் மேற்கொண்டால் பிறையில் கம்போங் மெயிட் ரோட் சாலையலுள்ள இந்திய குடியிருப்பு பகுதியும் அழிந்துவிடும் என பிறை சட்டமன்ற தொகுதியின் முன்னார் உறுப்பினருமான ராமசாமி சுட்டிக்காட்டினார்.

கம்போங் Main Road Perai யில் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் சுமார் 160 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தியர்களின் 200 ஆண்டுகால குடியிருப்பு பகுதியாக நம்பப்படும் அங்கு அண்மையில் பினாங்கு அரசாங்கம் புதிய நில விண்ணப்பங்களை முடக்கம் செய்திருப்பதால் மேலும் அதிகமான அடுக்குமாடி வீடுகளை கட்டும் திட்டத்தை அமல்படுத்தும் சூழ்நிலை உள்ளது. அதோடு 20 குடும்பத்தினர் வெற்றிகரமாக நிலத்திற்கு விண்ணம்பம் செய்து தங்களது நிலத்தையும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் புதிய நில விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படாமல் உயரமான அடுக்குமாடி வீடுகளை கட்டும் திட்டத்தை மாநில அரசாங்கம் தொடர்ந்தால் கம்போங் மெயின் ரோட் இந்தியர்களின் குடியிருப்பு இடமாக இருக்காது. எனவே இந்தியர்களின் அந்த குடியிருப்பு பகுதியை பினாங்கு மாநில அரசாங்கம் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டுமென ராமசாமி வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!