
கோலாலம்பூர், மார்ச் 16 – பிற இனத்தவரின் வழிபாட்டுத் தளங்களை சுற்றிக் காண்பிக்கும் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். தடுக்கப்படக் கூடாது என மூடா கட்சி கூறியுள்ளது.
பிற இனத்தவர் வழிபாட்டுத் தளங்களில் முஸ்லீம்களை உட்படுத்திய நடவடிக்கைகளுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் தடை விதிப்பதாக , நேற்று அம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Mohd Zawawi Ahmad Mughni கூறியிருந்தது குறித்து மூடா கட்சியின் தகவல் பிரிவின் தலைவர் Lugman Long கேள்வி எழுப்பினார்.
அத்தகையதொரு முடிவு, இந்நாட்டில் பல்லின மக்கள் சுபீட்சமாக வாழ்வதற்கு எந்தவொரு வகையிலும் உதவியாக இருக்கப் போவதில்லை என , மூடா கட்சியின் இணை தோற்றுநருமான அவர் கூறினார்.
முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களுக்காக மூடா கட்சி , அதன் உறுப்பினர்களுக்காக பல முறை பொங்கல் கொண்டாட்டம் , Maulidur Rasul , கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.