
ஜோகூர் பாரு,பிப் 2 – பிற மத சடங்குகளில், முஸ்லீம்கள் கலந்து கொள்வதற்கு தடை செய்யும் உத்தரவுக்கு, ஜோகூர் சுல்தான் Sultan Ibrahim Ibni Almarhum Sultan Iskandar இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.
ஜோகூர் சுல்தான் அந்த இணக்கத்தை தந்திருப்பதாக, மாநில சமய விவகார செயற்குழுவின் தலைவர் Mohd Fared Mohd Khalid தெரிவித்தார்.
அந்த உத்தரவின் படி, முஸ்லீம்கள், வழிபாட்டுத் தளங்கள் உட்பட இதர இடங்களில் மேற்கொள்ளப்படும் முஸ்லீம் அல்லாதவர்களின் சடங்குகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுகிறது.
எனினும், முஸ்லீம்கள் , பிற இனத்தவர் நடத்தும் பொது உபசரிப்புகள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். ஆனால், சமய நம்பிக்கையுடன் தொடர்புடைய சடங்குகளில் பங்குபெறக் கூடாது.
அதோடு அந்த தடையின்படி, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் முஸ்லீம் அல்லாதவர்கள் , கூட்டரசு மதமாகவும், ஜோகூர் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மதமாகவும் விளங்கும் இஸ்லாம் மதத்திற்கு ஏற்ப, முஸ்லீம்களின் உணர்வுகளை மதித்து நடந்துக் கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.