Latestமலேசியா

வேலை வாங்கித் தருவதாககூறி 171 வாங்காளதேசிகளை ஏமாற்றிய கும்பல் மீது உடனடியாக விசாரணை நடத்துவீர் -அஸாலினா

கோலாலம்பூர், டிச 26- மலேசியாவில் வேலை இருப்பதாக பொய்யான வாக்குறுதி வழங்கி இங்கு 171 வங்காளதேசிகளை ஏமாற்றிய கும்பல் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி பெங்கராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸலினா ஒத்மான் சைட் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமது தொகுதியில் நடைபெற்ற ஒரு பகுதியை இந்த சம்பவம் காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டுமென்பதோடு சட்டப்பூர்வமான குடியேற்றத் தொழிலாளர்கள் மலேசியாவில் வேலை இருப்பதாக எப்படி பொய்யான வாக்குறுதி வழங்கி ஏமாற்றப்பட்டனர் என்பதை கண்டறிவதற்கு விசாரணை நடத்தப்பட வேண்டுமென அஸலினா கேட்டுக்கொண்டார்.

இது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகும். வர்த்தகத்துறை உட்பட மனித உரிமைகளை மீறும் தரப்பினரிடம் நாம் எந்தவொரு இணக்கப் போக்கையும் கொண்டிருக்கக்கூடாது என அவர் ‘X’ஸில் பதிவிட்டுள்ளார்.

ஏமாற்றப்பட்ட குடிநுழைவு தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்த மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிமிற்கு சட்ட மற்றும் அமைப்புகளுக்கான சீரமைப்பு அமைச்சருமான அஸலினா தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!