
மணிலா, ஏப்ரல்-8, மத்திய பிலிப்பின்ஸில் கன்லாவோன் (Kanlaon) எரிமலை இன்று அதிகாலை வெடித்துச் சிதறியதில், 4,000 மீட்டர் உயரத்திற்கு வானில் கரும்புகையையும் சாம்பலையும் அது கக்கியது.
Negro தீவிலுள்ள அந்த எரிமலை வெடித்துச் சிதறும் பதைபதைக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
இதையடுத்து அருகாமையிலுள்ள மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
உள்ளூர் பள்ளிகளை மூடவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.
பிலிப்பின்ஸ் நாட்டில் இன்னமும் தீவிரம் அடங்காத 24 எரிமலைகளில் இந்த கன்லாவோன் எரிமலையும் ஒன்றாகும்.
கடந்த டிசம்பர் மாதமே அது வெடித்த போது, 4 முதல் 6 கிலோ மீட்டர் தூரத்திலான சுற்று வட்டார கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டனர்.
அதற்கு முன் செப்டம்பரிலும் எரிமலை ஒரே நாளில் ஆயிரக்கணக்கான டன் நச்சு வாயுக்களைக் கக்கியது.