Latestஉலகம்

பிலிப்பின்ஸில் பயணிகள் பஸ்ஸில் குண்டு வெடிப்பு; சிறுவன் மரணம்

மணிலா, ஜன 12 – பிலிப்பின்ஸ்ஸில் பயணிகள் பஸ்ஸில் குண்டு வெடித்ததில் 5 வயது சிறுவன் உயிரிழந்தான். காயம் அடைந்த அறுவரில் 5 மாத குழந்தை மற்றும் 3 வயது குழந்தையும் அடங்கும். தென் பிலிப்பின்ஸில் நிகழ்ந்த அந்த சம்பவத்திற்கு எந்தவொரு தரப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

மின்டானோ தீவில் Cotabato தீவில் பஸ் ஒன்று நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அதில் குண்டு வெடித்தது . பஸ்ஸின் பின்னால் அதிகமானோர் அமர்ந்திருந்தபோது திடீரென குண்டு வெடித்ததாக கூறப்பட்டது. அதற்கு முன்னதாக ஆடவர் ஒருவர் பஸ்ஸிலேயே ஒரு பேக்கை வைத்துவிட்டு இறங்கியதாகவும் அதன் பின் அதிலிருந்த குண்டு வெடித்ததாக போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!