
மணிலா, டிச 30 – பிலிப்பின்ஸில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 28 பேர் காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதோடு வெள்ளத்தினால் பெரிய அளவில் அடிப்படை வசதிகள் மற்றும் விவசாய விளைச்சல்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளத்தினால் கிராமங்கள் மூழ்கிக் கிடக்கின்றன. Visayas மற்றும் Mindanao உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 50,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு துயர் துடைப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.