
மணிலா, ஜூன் 30 – பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபரான காலம்சென்ற சர்வாதிகாரி மார்கோஸ் மக்கள் கிளர்ச்சியின் மூலம் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் மார்க்கோஸ் ஜூனியர் இன்று அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்கவிருக்கிறார். கோவிட் தொற்று பரவல் காரணமாக நீதிபதி முன்னிலையில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார். அந்த சடங்கு எவ்வித ஆடம்பரமின்றி மிகவும் எளிமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மார்க்கோஸ் குடும்பத்திற்கு பலர் இன்னமும் எதிர்பாக இருந்தபோதிலும் தமது வலுவான ஆதரவாளர்கள் மற்றும் சக்தி வாய்ந்த சமூக வலைததலைங்களின் செல்வாக்கினால் அதிபர் தேர்தலில் 65 வயதுடைய மார்க்கோஸ் ஜூனியர் வெற்றி பெற்றார்.
நாம் அனைவரும் இணைந்து ஒன்றுபடுவோம் என்ற தாரக மந்திரத்தோடு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பிலிப்பின்ஸ் பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டும் திட்டங்களையும் அறிவித்ததால் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு அதரவு கிடைக்க உதவியது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்ளுக்கு பல புதிய திட்டங்களை மார்க்கோஸ் ஜூனியர் அறிமுகப்படுத்துவார் என அரசியல் பார்வையாளர்கள் நம்புகின்றனர்.