Latestஉலகம்

பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்கின்றனர்

நியூயார்க், மே 4-  உலக கோடிஸ்வரர்களில் ஒருவரும்   மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான   பில் கேட்ஸசும் அவரது மனைவி   மெலிண்டாவும் தங்களது 27ஆண்டு கால திருமண வாழ்க்கையை  முடித்துக்கொள்வதற்காக விவாகரத்து செய்துகொள்வதற்கு முடிவு செய்தனர்.

தீவிர ஆலோசனைக்குப் பின் திருமண உறவை முடித்துக்கொள்வது என முடிவு செய்துள்ளதாக அவ்விருவரும் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

கடந்த  27 ஆண்டுகளில்   3 குழந்தைகளை  வளர்த்துள்ளோம்.  உலகம் முழுவதிலும் செயல்படும் அறக்கட்டளையையும் நிறுவி அதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் சுகாதாமுடன் வாழ்வதற்கான வழிகளையும்  வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.

எனினும் எங்களது திருமண வாழ்வை  முடித்துக்கொள்ள  நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

எங்களின் வாழ்க்கையில் தொடர்ந்து  ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கயில்லையென பில் கேட்ஸ்சும் மெலிண்டாவும் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!