
கோலாலம்பூர், மார்ச் 21 – தனது 3 பிள்ளைகள் ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி , தனித்து வாழும் தாயான Loh Siew Hong செய்திருந்த வழக்கின் தீர்ப்பு, மே 11 -ஆம் தேதி தெரிய வரும் .
இன்று அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் வாதத்தை செவிமடுத்தப் பின்னர் , கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அந்த தேதியை நிர்ணயித்தது.
14 வயதான தனது இரட்டை மகள்களையும், 11 வயதான மகனையும் , தனது முன்னாள் கணவர் மதம் மாற்றம் செய்தது செல்லுபடியாகாது எனவும், தனது பிள்ளைகள் இந்துக்கள் எனும் உத்தரவையும் நீதிமன்றம் வெளியிட வேண்டுமென Loh Siew Hong -கின் , தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.