கோலாலம்பூர். பிப் 22- தனித்து வாழும் தாயான Loh siew Hong ஹேபியர்ஸ் கோர்ப்பஸ் வழக்கில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் பிள்ளைகளை பராமரிப்பதற்கு தாய்க்கு கிடைக்க வேண்டிய உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளதாக பினாங்கு துணை முதலமைச்சரான பேராசிரியர் டாக்டர் ராமசாமி தெரிவித்தார்.
அவர் தொடுத்திருந்த அந்த வழக்கு சமயம் அல்லது இன விவகாரத்திற்கு தொடர்பானது அல்ல. மாறாக தனது பிள்ளைகளை பராமரிப்பதற்கு ஒரு தாய்க்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைக்காக நீதிமன்றத்தின் மூலம் நடத்திய போராட்டம்தான் அதுவென ராமசாமி சுட்டிக்காட்டினார்.
நேற்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில் Loh Siew Hong கின் ஹேபியர்ஸ் கோர்ப்பஸ் வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக வந்திருந்த DAP யின் முன்னணி தலைவருமான டாக்டர் ராமசாமி தமது முகநூலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப தமது மூன்று பிள்ளைகளையும் பராமரிக்கும் உரிமை Loh Siew Ho வுக்கு இருப்பதாக நீதிபதி Datuk Collin Lawrence Sequera தீர்ப்பு அளித்திருந்தார்.