Latestமலேசியா

உத்தரவாதக் கடிதம் எங்கே?; பெரோடுவா பெஸ்ஸா உரிமையாளர் நாககன்னி கேள்வி

ஜோகூர் பாரு, ஜனவரி 4 – தமக்கு எற்பட்ட சிக்கலை தீர்த்து வைப்பது தொடர்பில், இதுவரை எந்தவொரு எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தையும், அந்நிறுவனம் வழங்கவில்லை என, வாங்கிய எட்டு மணி நேரத்தில் பழுதடைந்த புரோடுவா பெஸ்ஸா காரின் உரிமையாளர் நாககன்னி தெரிவித்தார்.

குறிப்பாக, காரை மீண்டும் பெரோடுவாவே வாங்கிக் கொள்ளும் என்பது தொடர்பிலும், காருக்கான கடனுதவியை திரும்ப செலுத்த தேவையில்லை என்பது தொடர்பிலும், தாம் இதுவரை எந்த ஒரு எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தையும் பெறவில்லை என 31 வயது மேலாளரான நாககன்னி கூறியுள்ளார்.

தாம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைக்கு சுமூகமான முறையில் தீர்வுக் காணப்படுமென நேற்று ஓர் அறிக்கையின் வாயிலாக பெரோடுவா நிறுவனம் கூறியிருந்ததை நாககன்னி அறிந்திருக்கும் போது, இரண்டு மாதங்கள் ஆகியும் அதற்கான உத்தரவாதக் கடிதம் எதையும் தாம் பெறவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதனால், நடப்பு சூழலை இலகுவாக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காக ஊடக அறிக்கையை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாரிடமும் விவாதம் புரிவதோ, வைரலாகி பிரபலம் தேடுவதோ தமது நோக்கமில்லை என கூறியுள்ள நாககன்னி, தீர்வு ஒன்றே தமது இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நாககன்னியின் காரை திரும்ப வாங்கிக் கொள்ள பெரோடுவா நிறுவனம் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும், அவரது பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், பெரோடுவா நிறுவனத்தின் நடவடிக்கை பிரிவு அதிகாரி ஒருவர் அறிக்கை வாயிலாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!