Latestமலேசியா

பி.கே.ஆர் கட்சிக்கு அஸ்மின் திரும்புவதற்கு ஏற்பாடா? தியான் சுவா விளக்கம்

கோலாலம்பூர், அக் 23- பி.கே.ஆர் கட்சிக்கு மீண்டும் அஸ்மின் அலி திரும்புவதற்கான முயற்சியில் தாம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுவதை அக்கட்சியின் உதவித் தலைவரான தியான் சுவா மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என அவர் கூறினார். மலாக்கா தேர்தலில் வெற்பெறுவதற்கு எவருடனும் பக்காத்தான் ஹராப்பான் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியதையும் அவர் தற்காத்தார். அதே வேளையில் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீட்டும் கட்சிக்கு திரும்புவதை ஏற்றுக்கொள்ளப்படுவார்களா என்பதை கண்டறிவதற்காகவே தாம் அவ்வாறு தெரிவித்தாக கூறப்படுவது அபத்தமான ஒன்றாகும் என தியான் சுவா கூறினார்.

PKR லிருந்து வெளியேறுயவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பும் விவகாரத்தில் தாம் முடிவு செய்ய முடியாது என தியான் சுவா விவரித்தார். எனினும் அஸ்மினும் மேலும் 20 எம்.பிக்களும் பி.கே.ஆர் கட்சிக்கு திரும்பினால் கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமராகுவதற்கான பெரும்பான்மையை பெற முடியும் என பத்து தொகுதின் முன்னாள் எம்.பி.மான தியான் சுவா தெரிவித்தார். இப்படி ஒன்று நடந்தால் அதை ஏற்றுக்கொள்வது அன்வாரைப் பொறுத்தது. அவர்கள் கட்சிக்கு திரும்பும்படி நான் அழைக்கவில்லை. அதோடு பெர்சத்துவின் முஹிடின் யாசின் மற்றும் அவரது குழுவுடன் பி. கே.ஆர் ஒத்துழைக்க வேண்டுமா, வேண்டாமா? என்பதை முடிவு செய்வதும் அன்வாரைப் பொறுத்தது. நமது வெற்றிக்காக ஒத்துழைப்பை கண்டறிய வேண்டும் என்பதைத்தான் நான் கூறினேன் என தியான் சுவா விளக்கம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!